வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (09:14 IST)

பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் என்.ரமணி காலமானார்

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் டாக்டர் என்.ரமணி காலமானார். அவருக்கு வயது 82.


 

 
பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் டாக்டர் என்.ரமணி.  82 வயதான இவர்  புல்லாங்குழல் இசை மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தவர். 
 
1934 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த ரமணி, தனது 8 ஆவது வயதில் இருந்து 78 வயது வரை பல்வேறு இசை விழாக்களில் பங்கேற்றவர். 150 க்கும் மேற்பட்ட முறை வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். இவர் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தார்.

இவரது சாதனைகளைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி சிறப்பிடத்தது.
 
மேலும் தமிழக அரசின் சார்பில், கலைமாமணி விருது வழங்கப்பட்டது. ரமணியின் இசை சேவைக்காக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 
"ரமணியின் புல்லாங்குழல்" என்ற இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அவருக்கு  2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். ரமணியின் பேரன் அதுல் குமாரும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.