வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (13:18 IST)

அழகிரி பேரணியில் கூடிய 5 ஆயிரம் பேர் : ஒரு லட்சம் என்னாச்சு?

அழகிரி தலைமையில் நடைபெற்றும் வரும் பேரணில் அவர் கூறியது படி இல்லாமல், குறைந்த அளவிலான ஆதரவாளர்களே கலந்து கொண்டுள்ளனர்.

 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது தலைமையில் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என அவரது மகனான அழகிரி தெரிவித்திருந்தார். திமுகவின் உண்மையான விசுவாசிகள் சுமார் 1 லட்சம் பேர் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று அழகிரி அறிவித்ததால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. 
 
அதன்படி அழகிரி தலைமையில் தற்பொழுது அமைதிப் பேரணி இன்று காலை தொடங்கியுள்ளது. அழகிரி கருப்புச் சட்டை அணிந்தவாறு பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அவரோடு அவரது மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்தவாரும், பெரிய பெரிய பிளக்சுகளை கையில் ஏந்தியும், அழகிரியின் மாஸ்கை அணிந்தபடியும் கருணாநிதி மற்றும் அழகிரியை புகழ்ந்து முழக்கமிட்டபடியும் அமைதிப்பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

 
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி  மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி வரை சென்றது. ஆனால், இந்த பேரணியில் வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என அழகிரி நம்பிக்கையுடன் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், மிக குறைவானவர்களே இந்த பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், ஒன்றை லட்சம் பேர் கலந்து கொண்டதாக அழகிரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.