தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது


Ashok| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (20:37 IST)
2016 ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. ஆளும் அதிமுக அரசின் கடைசி கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
ஆளுநர் ரோசைய்யா உரையுடன் முதல் நாள் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் நாளை நடக்கும் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
 
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிவாரணப் பணிகள், செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம், சட்டம்,ஒழுங்கு போன்ற பிரச்சினைகளை எழுப்பா திமுக, தேமுதிக கட்சிகள் தயராக இருக்கிறது
 
அதிமுக அரசை விமர்சித்து பேசி கடந்த ஆண்டு நடந்த கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக. எம்எல்ஏ ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகியவர்கள் இந்த கூட்டத் தொடரிலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது,


இதில் மேலும் படிக்கவும் :