செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 27 மே 2015 (04:36 IST)

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்யாமல் உரிமம் வழங்குவதாக விஜயகாந்த் பரபரப்பு புகார்

விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலைகளில், எந்தவித ஆய்வும் செய்யாமல், உரிமம் வழங்குவதால் தான் விபத்துக்கள் நடைபெறுகிறது என விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 
 
தமிழகத்திலேயே, விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிக அளவு பட்டாசு ஆலைகள் உள்ளது. அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே பட்டாசு ஆலைகளில் வேலை செய்வது தான் என உள்ளது. 
 
இந்நிலையில், சாத்தூர் அருகிலுள்ள சிவலிங்கப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு வேலை பார்த்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
 
பட்டாசு ஆலைகளில், எந்தவித ஆய்வும் செய்யாமல், உரிமம் வழங்குவதால் தான் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது.
 
ஒரு விபத்து நடக்கும்போது மட்டும் பட்டாசு ஆலைகளைப் ஆய்வு செய்வது போலவும், மற்ற நேரத்தில் அமைதியாகவும்  இருந்துவிடுவது அதிகாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
 
எனவே, பட்டாசு ஆலைகளிடம் கடும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் காட்டுவதை இனியாவது நிறுத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து தமிழக அரசு விழிப்புடன்  செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.