வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (16:54 IST)

சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதா?

சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூரில் உள்ளது. இந்த பங்களாவில் முன்னர் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.


 
 
அதுமட்டுமல்லாமல் சில முக்கிய காரணங்களுக்காகவும் இந்த பங்களா பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் 10 லாரிகள் சென்றுள்ளது. பல்லாயிரம் கோடி நோட்டுக்களாக சிறுதாவூர் பங்களாவில் உள்ள ரகசிய பாதாள அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பின்னர் அந்த பங்களா கேட்பாரற்று இருந்தது. இந்நிலையில் இன்று அந்த பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பம் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்படுவதாக அதிமுக அமைச்சர்கள் அறிவித்துள்ள இந்த நிலையில் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
குடும்பமே வெளியேறுவதால் தக்க ஆதார ஆவணங்களை தீ வைத்து அழித்திருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. பங்களாவின் உள்ளேயும், வெளியேவும் உள்ள புற்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சில முக்கிய ஆவணங்கள் எரிந்துள்ளதாக பேசப்படுகிறது.