வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (13:06 IST)

சட்டமன்ற தேர்தல் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2016 ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. 


 

 
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 11 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் கனமழை மற்றும் பெயர் சேர்ப்பு காரணமாக, இறுதி பட்டியலை வெளியிடுவதற்கன காலத்தை நீட்டிக்கவேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கேட்டனனர். எனவே இறுதி பட்டியல் இன்று (20 ஆம் தேதி) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.62 கோடியாக உள்ளது. அந்த எண்ணிக்கையோடு சுமார் 15 லட்சம் புதிய வாக்களர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தற்போது சில மாவட்டங்களின் இறுதி பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
 
அதன் படி, நெல்லை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 24,51,666 வாக்காளர்கள் இருப்பதாகவும், அந்த மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு வெளியிட்டுள்ளார். அதன் படி  12,10,527 ஆண்களும்,  12,41,079 பெண்களும், இதர பிரிவினர்  60 பேரும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6  சட்டமன்ற  தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தட்சிணாமூர்த்தி  தற்போது வெளியிட்டார். அங்கு ஆண்களை விட பெண்வாக்காளர்களே அதிகம் ஆண்கள் 669897 பேரும், பெண்கள்  690836 பேரும், திருநங்கைகள் 101 பேரும், புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் 30047 பேர் என மொத்த வாக்காள ர்கள் 1360834 இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
 
திருச்சி மாவட்டத்தின் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் கலெக்டர் பழனிசாமி. அதன் படி  ஆண்கள் 10,52,925 பேரும் பெண்கள்  10,92,156 பேரும்,  திருநங்கைகள்  120 பேர் என மொத்தம் 21,45,201 பேர் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 
திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டார். அதில் ஆண்கள்  849920 பேரும், பெண்கள்  870012 பெரும் மாற்று பாலினம்  140 என மொத்தம் மொத்தம் 1720072 வாக்காளர்கள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.