1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 23 ஜனவரி 2016 (08:02 IST)

சென்னைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஈரான் நாட்டு காதல் ஜோடி

போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த ஈரான் நாட்டு காதல் ஜோடி

போலி பாஸ்போர்ட்டில் கோவாவில் இருந்து சென்னைக்கு வந்த ஈரான் நாட்டு காதல் ஜோடி  கைது செய்யப்பட்டனர்.


 

 
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து கோவா வழியாக விமானம் ஒன்று வந்தது.
 
அந்த விமானத்தில், ஈரான் நாட்டை சேர்ந்த முகமது ரிஷா என்பவரும், ஆஸ்மி மன்சூ என்ற பெண்ணும் உள்நாட்டு பயணிகளாக கோவாவில் இருந்து சென்னைக்கு வந்தனர்.
 
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
 
எனவே வழக்கத்விட சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பன்னாட்டு விமான நிலையத்துக்கு உள்நாட்டு பயணிகளாக வந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர்களிடம் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
அவர்களிடம் விமான பயணச்சீட்டு, மற்றும் "போர்டிங் பாசை" குடியுரிமை அதிகாரிகள் கேட்டனர். அவர்களிடம் டிக்கெட் இருந்தது. ஆனால் "போர்டிங் பாஸ்" இல்லை.
 
விமானத்தில் வரும் போது அதை கீழே போட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
 
இதையடுத்து 2 பேரின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தபோது ஈரான் நாட்டு பாஸ்போர்ட்டு மற்றும் இஸ்ரேல் நாட்டு பாஸ்போர்ட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
 
அந்த விசாரணையில் அவர்கள், தாங்கள் இருவரும் காதல் ஜோடி என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்ததாகவும் கணவன்–மனைவியாக சுற்றிய தாங்கள் சென்னையில் இருந்து லண்டன் செல்ல உள்ளதாகவும் கூறினர்.
 
ஆனால் அவர்கள் இருவரும் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, அந்த காதல் ஜோடி விமான நிலைய காவ்லதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
விமான நிலைய காவல்துறையினர் போலி பாஸ்போர்ட்டு வழக்குப் பதிவு செய்து ஈரான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடி இருவரையும் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.