அதிமுக கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மீது சரமாரி செருப்பு வீச்சு


K.N.Vadivel| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (00:04 IST)
அதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மீது சரமாரியாக செருப்பு வீச்சப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 
திண்டிவனத்தில், முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் 99 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்  நடைபெற்றது. அப்போது, அதிமுக சிறப்பு பேச்சாளர் முன்னாள் எம்எல்ஏ தீரன் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது கூட்டத்திலிருந்து திடீரென ஒருவர் சரமாரியாக செருப்பை வீசினார். செருப்பு வீசிய நபரை அதிமுகவினர் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
 
போலீஸ் விசாரணையில், செருப்பு வீசிய நபர் பாமகவைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்தது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :