ராம மோகனராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

ராம மோகனராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!


Caston| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (10:16 IST)
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 
சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடியாக தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீடு மற்றும் தலைமைச் செயலக அவரது அறை போன்றவற்றில் சோதனை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த தலைமை செயலாளரிடமும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது இல்லை. இதுவே முதல்முறை.
 
இதற்காக துணை ராணுவம் கூட வரவழைக்கப்பட்டது. மேலும் அவரது மகன் விவேக் வீட்டிலும் சோதனை நடத்தினர். அவரது நண்பர்களிடமும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், நகைகள், ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன.
 
இதனையடுத்து ராம மோகனராவ் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் இன்று காலை ராம மோகனராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் இன்னமும் வரவில்லை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :