வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (16:52 IST)

தமிழக நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை - ஈ.வி.கே.எஸ்.

தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை. நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய். பொதுத்துறை நிறுவனங்கள் கடனையும் சேர்த்தால் 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி, அதள பாதாளத்தில் தமிழக அரசின் நிதி நிலைமை விழுந்து கிடக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் கடனாளியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தை தூக்கி நிறுத்துவதற்கு எந்தவிதமான அறிகுறியும் தற்போது தெரியவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் படித்த இளைஞர்கள் 85 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிற எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.