1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 1 நவம்பர் 2014 (12:25 IST)

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, நியமித்து சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் பதவி விலகியதை அடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
 
இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சனிக்கிழமை காலை அறிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பணியாற்றுவேன் என்று கூறினார்.
 
மேலும், கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் முன், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஞானதேசிகன், தங்கபாலு உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிவேன்.
 
நாளை பதவியேற்பது குறித்து ஞானதேசிகனிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.