1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (02:45 IST)

37 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்து சிதறிய ராணுவ குண்டு

வேலூரில் விவசாய நிலத்தில் கிடந்த ராணுவ கையெறி குண்டினை, வெடிகுண்டு நிபுணர்கள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் செயலிழக்க செய்துள்ளனர்.
 

 
வேலூரை அடுத்த கணியம்பாடி ஒன்றியம் தெள்ளை பகுதியைச் சேர்ந்த தஞ்சி (45) என்பவரின் விவசாய நிலத்தில் கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
 
இதனையடுத்து மாவட்ட காவல்துறையினர் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் அங்கு சென்று நடத்திய விசாரணையில் இந்த குண்டு ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கையெறி குண்டு என்பதும் 1979-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
 
இந்நிலையில் வெடிகுண்டை செயலிழக்க செய்ய சென்னையில் இருந்து 2 வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.