Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூவத்தூரில் தங்கியுள்ள ஈரோடு எம்.எல்.ஏ. தென்னரசு நிலை கவலைக்கிடம்!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (23:16 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசுவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வருபவர் தென்னரசு. இவர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.                          

இவர், ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது உடல்நலம் ஓரளவு தேறி வந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட மோதலுக்குப் பின் கூவத்தூரில் சசிகலா முகாமில் தங்க வைக்கபட்டுள்ளார்.    

இந்நிலையில், அவரால் சரியான நேரத்திற்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், உடல்நலம் தேறி வந்த தென்னரசுவுக்கு உடல் பலகீனமாகி அபாய கட்டத்தில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :