Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவிற்கே தமிழக மாணவர்கள் எடுத்துக்காட்டு: மத்திய அமைச்சர் புகழாரம்


Abimukatheesh| Last Updated: சனி, 4 பிப்ரவரி 2017 (16:47 IST)
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த வாரம் இரு கப்பல்கள் மோதிகொண்டது. இந்த விபத்தில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதை அகற்ற மாணவர்கள் களத்தில் இறங்கிய பின்னெரே அதிக அளவில் கழிவுகள் அகற்றப்பட்டது.

 

 
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த வாரம் இரண்டு கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் கடலில் மீன்கள், ஆமைகள் என எராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியது.
 
எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவிய எண்ணெய் படலத்தை அகற்ற கடற்படை ஊழியர்கள் மற்று மாநகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் முழுமையாக இன்னும் அகற்றவில்லை. இதில் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து மாணவர்கள் இறங்கிய பிறகு அதிக அளவில் அகற்றப்பட்டது.
 
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியதாவது:-
 
கப்பல் விபத்து பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து கச்சா எண்ணெய் அகற்றுவதற்கு உதவியதற்கு மிகவும் பாராட்டுக்கள். தமிழக மாணவர்கள் இந்தியாவிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர், என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :