Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகரில் 'என் தேசம் என் உரிமை' இளைஞர்கள் கட்சியும் போட்டி


sivalingam| Last Modified புதன், 15 மார்ச் 2017 (22:52 IST)
சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி காரணமாக உருவான அரசியல் கட்சி தான் 'என் தேசம் என் உரிமை. இந்த கட்சி தற்போது நடைபெறவுள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.


 


ஏற்கனவே ஆர்.கே.நகரில் அதிமுகவின் இரண்டு அணிகள், திமுக, பாஜக, தேமுதிக, தீபா பேரவை, என ஆறுமுனை போட்டி இருக்கும் நிலையில் தற்போது இளைஞர்கள் ஆரம்பித்த புதிய கட்சியும் களமிறங்குகிறது

இதுகுறித்து  'என் தேசம் என் உரிமை' கட்சி இளைஞர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, 'என் தேசம் என் உரிமை’’ என்ற கட்சியை துவக்கி மாவட்டம் வாரியாக சென்று உறுப்பினர்களை இளைஞர்கள் சேர்த்து வருகிறோம். ஆர்.கே. நகரில் போட்டியிட இதுவரை 70 பேரிடம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.. விருப்ப மனு அளித்தவர்களிடம் 10 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்' என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :