வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (14:45 IST)

சென்னை கலங்கரை விளக்கம் அருகே, பறக்கும் ரயில் தடம் புரண்டது

வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் கலங்கரை விளக்கம் அருகே தடம் புரண்டது.
 
பறக்கும் ரயில் என்று அழைக்கப்படும், மேம்பாலம் வழியாச் செல்லும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிவரை சென்று வருவது வழக்கம்.
 
அதன்படி, சென்னை வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்து ரயில், கலங்கரை விளக்கம் அருகே  மதியம் 12.30 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது.
 
அந்தப் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்ததால் ரயில் மெதுவாக இயக்கப்பட்டது.
 
இதனால் அந்த ரயில் மெதுவாகச் சென்றபோது தடம் புரண்டதால், ரயில் பெட்டிகள் சாயவில்லை. மாறாக கீழே இறங்கி நின்றன.
 
இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினர்.
 
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.