வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 30 மே 2016 (14:47 IST)

தமிழகத் தேர்தலுக்கு ரூ.210 கோடி செலவு செய்த தேர்தல் ஆணையம்!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு தமிழகத் தேர்தல் ஆணையம் இதுவரை ரூ.210 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.


 
 
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்தானதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் லக்கானி, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜுன் 19-ஆம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.
 
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டசபை உறுப்பினர் சீனிவேல் காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதை சட்டமன்ற செயலர் அறிவிப்பார் என்றும். தமிழகத் தேர்தலுக்காக இதுவரை ரூ.210 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக ரூ.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
 
மேலும், இன்று அரசிதழில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்தது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது என ராஜேஷ் லக்கானி கூறினார்.