வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (10:20 IST)

இன்றுடன் நிறைவடைகிறது உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரச்சாரம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யவும், பொதுக் கூட்டம் நடத்தவும் கூடாது என்று தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி இடைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மதுக் கடைகளை செப்.16 ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான செப்.18 மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான செப்.22 ஆம் தேதியும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.