1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (17:43 IST)

சீட்டு பணத்திற்காக மூதாட்டி கொலை; உறவினர் கைது : கரூரில் பரபரப்பு

சீட்டு பணத்திற்காக மூதாட்டி கொலை; உறவினர் கைது : கரூரில் பரபரப்பு

கரூர் அருகே மூதாட்டியை நகைக்காக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் சீட்டு கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கேட்டு கொலை செய்ததாக மூதாட்டியின் உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 

 
கரூர் அடுத்து நன்னியூர் புதூர் துவரப்பளையத்தில் வசிப்பவர் செல்லப்பன். இவர் விவசாயம் செய்துவருகிறார் இவர் மனைவி கருப்பாயி (வயது 65), செல்லப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு கடந்த 16ம் தேதி இரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
 
வீட்டில் தனியாக இருந்த அவர் மனைவி கருப்பாயி கழுத்து அறுபட்டு கொலைசெய்யப்பட்டு இருந்தார். அவர் கழுத்தில் இருந்த தாலிக்கொடி உட்பட சுமார் ஏழரை சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. தனது மனைவி கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லப்பன் வாங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 
 
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 
 
இந்நிலையில் வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பாயி என்பவரின் உறவினர் மகன் மூர்த்தி (வயது 28) என்பவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதும், மேலும் நகைக்காக இந்த கொலை செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
 
அதாவது, அவ்வப்போது கருப்பாயிடம், பாட்டி காசு கொடு, பணம் கொடு என்று அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்துள்ளார் மூர்த்தி. சம்பவத்தன்று ரூ.100 கேட்டு வந்த மூர்த்தி, அன்று மூர்த்தி சீட்டு தொகை ரூ.9 ஆயிரம் கட்ட வேண்டும், சீட்டு எடுத்தவர்கள் தன்னை துன்புறுத்துவதாக கூறி தொல்லை கொடுக்க, அப்போது சமைப்பதற்காக வெங்காயம் வெட்டிய நிலையில் வைத்திருந்த அரிவாள் மனையை காட்டி போகிறாயா.. இல்லை வெட்டட்டுமா.. என்று கருப்பாயி கேட்க,  நீ என்னை என்ன வெட்டுவது, நான் உன்னை வெட்டுகின்றேன் என்று கூறி கழுத்தை வெட்டியுள்ளார். 
 
இந்த சம்பவத்தையடுத்து வாங்கல் காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் ஒப்படைத்தனர். நீதிபதி ரேவதி குற்றவாளி மூர்த்தியை நீதிமன்ற கவாலில் வைக்க சொல்லி உத்திரவிட்டதையடுத்து திருச்சி மத்திய  சிறைக்கு அனுப்பி வைத்தனர்.