வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2016 (19:21 IST)

சில்லரை தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை சரிவு

நாமக்கல் மாவட்டத்தில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை கடந்த மூன்று நாட்களாக 40 காசுகள் குறைந்துள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க மேற்கொண்ட திட்டத்தில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு, குறு வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களிடையே பணம் புழக்கம் இல்லாததால் வியாபாரம் ஒரு பக்கம் பாதிப்படைந்து வருகிறது.
 
உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிய நிலையில் உள்ளன. இதனால் முட்டை விலையும் சரிவை சந்தித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடைப்பெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 82 காசிலிருந்து 3 ரூபாய் 62 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த மூன்று நாட்களில் முட்டை ஒன்றின் விலை 40 காசுகள் குறைந்துள்ளது. சில்லரை தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை குறைந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் கூறினார்கள். மேலும் தினமும் 3 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.