1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (16:43 IST)

தினகரன் மடியில் கை வைக்க உள்ள எடப்பாடி: உஷார் ஆவாரா!

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு சாதகமாக வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினகரன் இந்த அரசு இன்னும் சில மாதங்கள் தான் என கூறி வருகிறார்.
 
தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் தினகரன் ஆட்சியை கலைக்க நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆட்சியை தக்கவைக்க சில மறைமுக திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
 
தினகரன் அணியில் இருக்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம். தீர்ப்புக்கு பின்னர் எங்களிடம் வந்தால் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். ஆனால் தினகரன் பக்கம் இருந்தால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
 
இதனால் நீங்கள் மீண்டும் சில மாதங்கள் பதவி இல்லாமல் இருக்க வேண்டும் என பேச்சுவார்த்தையை எடப்பாடி தரப்பு நடத்தியுள்ளது. இதனால் தினகரன் அணியில் உள்ள 18 எம்எல்ஏக்களில் 5 எம்எல்ஏக்களை தவிர மற்ற அனைவரும் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என எடப்பாடி தரப்பு கணக்கு போட்டுள்ளது.
 
எடப்பாடியின் இந்த உள்குத்து வேலையை தினகரனும் அறிந்துள்ளாராம். எனவே அவரும் தனது எம்எல்ஏக்களை தக்க வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு மாதத்துக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது.