Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்து வழக்கு!

வியாழன், 16 பிப்ரவரி 2017 (14:52 IST)

Widgets Magazine

அதிமுகவில் சசிகலாஅணிக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் இடையில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் யார்  தரப்பு ஆட்சி அமைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு ஆளுநரை சந்தித்தார் அவர். அவருடன் மூத்த அமைச்சர்கள் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  ஆகியோர் உடன் சென்றனர்.

 
இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவரது எம்எல்ஏக்கள் ஆதரவு  கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் அணி தாங்கள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க தயார் என ஆளுநரிடம் கூறியிருந்ததால் 15 நாட்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.  இதனையடுத்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் ஜோதி என்பவர் சென்னை  ஹைகோர்ட்டில் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய  பெஞ்ச் முன்னிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணை என்று கூறப்பட்டது.
 
வழக்கறிஞர் ஜோதி என்பவர் ஜெயலலிதாவுக்கு நீண்ட காலம் தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் கொண்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆட்சியை பிடிக்கும் வரை யுத்தம் தொடரும்: ஓ.பி.எஸ்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுத்தை அடுத்து, சசிகலா குடும்பம் வசம் ...

news

10 அடி அகலம்;12 அடி நீள அறை ; பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா - சசிகலா சிறை வாழ்க்கை

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தற்போது பெங்களூர் சிறையில் ...

news

துணை முதல்வராகிறார் டி.டி.வி.தினகரன்?

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ...

news

ஆட்சி அமைக்க ஓ.பி.எஸ்-ஐ ஆளுநர் ஏன் அழைக்கவில்லை? - ஒரு அலசல்

அதிமுக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் ஓ.பி.எஸ் தரப்பு கொண்டு வர தவறி விட்டது அல்லது முடியாமல் ...

Widgets Magazine Widgets Magazine