சசிகலா ஜெயிலுக்கு போனதை எடப்பாடியார் கொண்டாடினாரா? மு.க.ஸ்டாலின்

Sivalingam| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (21:59 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில் இன்று கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். இந்நிலையில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், சசிகலா ஜெயிலுக்கு போனதை அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடியார் பட்டாசு வெடித்து கொண்டாட சென்றிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற அளித்த தண்டனைக்கு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியதாகவும், தற்போது எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கூவத்தூரில் நடைபெறும் குதிரை பேரத்தை  தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும்,  வரும் தேர்தலில் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க மக்கள் தயாராகி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :