Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆளுநரை மீண்டும் ஏன் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?

Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (11:10 IST)

Widgets Magazine

சசிகலா சார்பில் முதல்வராக முன்னிருத்தப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி 3வது முறையாக மீண்டும் ஆளுநரை சந்திக்க தற்போது செல்ல இருக்கிறார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு பாதகமாக தீர்ப்பு வந்தவுடன், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எம்.ல்.ஏக்களின் ஆதரவு கடிதமும், ஆளுநரிடம் கடந்த 14ம் தேதி கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
 
எனவே, நேற்று எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது,  ‘விரைவில் உங்களை அழைக்கிறேன்’என கூறி வித்யாசாகர் ராவ் அவரை அனுப்பிவிட்டார். அதன் பின்னர் ஆளுநரிடமிருந்து அழைப்பு வரும் என எடப்பாடி தரப்பு எதிர்பார்த்தது. நேற்று மாலை வரை ஆளுநர் அழைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக ஒரு நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது.
 
இந்நிலையில், இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டார். எனவே, இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகை நேரம் ஒதுக்கியது.  
 
எனவே, அவரை சந்திப்பதற்காக, எடப்பாடி கூவத்தூரிலிருந்து புறப்பட்டுள்ளார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் உடன் செல்கின்றனர்.

இந்த சந்திப்பில், தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் படி அவர் மீண்டும் ஆளுநரை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது..


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எந்த நிலையிலும் போயஸ் கார்டன் இல்லத்தை விடக்கூடாது: தினகரனுக்கு டிப்ஸ் கொடுத்த சசிகலா!

எந்த நிலையிலும் போயஸ் கார்டன் இல்லத்தை விடக்கூடாது: தினகரனுக்கு டிப்ஸ் கொடுத்த சசிகலா!

news

ஆடு மற்றும் மாட்டிறைச்சியில் ரூபாய் நோட்டு தயாரிப்பு: பிரிட்டன் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!!

பிரிட்டன் நாட்டில் காகிதத்தில் அச்சடிக்கப்படும் பவுண்டு நோட்டுகளை ஒழித்துவிட்டு, ...

news

உடைந்தது சசிகலா அணி?: செங்கோட்டையன், எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் மோதல்?

ஜெயலலிதா இறந்த பின்னர் ஒற்றுமையாக இருந்த அதிமுக தற்போது சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் ...

news

சசிகலாவுடன் டி.டி.வி.தினகரனும் சிறைக்கு சென்றிருக்க வேண்டும்: ஆனால் தப்பித்துவிட்டார்!

தமிழகமே கொண்டாடிய சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ...

Widgets Magazine Widgets Magazine