Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 லாரிகளில் 3,10,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்த எடப்பாடி அணியினர்


Abimukatheesh| Last Updated: திங்கள், 12 ஜூன் 2017 (15:24 IST)
சசிகலாவை பொதுச்செயலாளராகவும், தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் ஏற்றுக்கொள்வதாக அதிமுக, நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட 3,10,000 பிரமாண பத்திரங்களை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

 

 
தேர்தல் ஆணையத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி அணியினர் 4 லாரிகளில் 3,10,000 பிரமாண பத்திரங்களை தாக்கல்செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கட்சியை ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் உரிமை கோரி அவ்வப்போது இரு அணிகளும் அவர்களது ஆதரவாளர்களிடம் கையெழுத்து பெற்ற பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இதுபோன்று ஓபிஎஸ் அணியினர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து அதிமுக இரட்டை சின்னம் முடக்கப்பட்டது. தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கும் தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் குவிந்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி அணிக்கு துணையாக நிற்க தயார் என்று தெரிவித்தனர். 
 
இந்நிலையில் எடப்படி பழனிச்சாமி அரசு அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் முகாமிட்டு 4 லாரிகளில் 3,10,000 பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். சசிகலாவை பொதுச் செயலாளராகவும், தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் ஏற்றுக்கொள்வதாக அதிமுக, நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார்.


இதில் மேலும் படிக்கவும் :