எடப்பாடி பழனியம்மாவா?..அம்மா பாசத்திற்கு அளவே இல்லையா..?


Murugan| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (15:24 IST)
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

 

 
இன்னும் 15 நாட்களுக்குள் அவர் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 
 
இந்நிலையில், அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும், அவரோடு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
 
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி என்பதற்கு பதிலாக எடப்பாடி பழனியம்மா என தவறுதலாக செய்தியை வெளியிட்டு விட்டார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது கண்டு சிரித்த நெட்டிசன்கள். உங்க அம்மா பாசத்திற்கு அளவே இல்லையா?  என கிண்டலடித்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :