மூன்றாக பிரிகிறது வேலூர் மாவட்டம்: புதிய மாவட்டங்கள் தமிழகத்தில் உதயம்

Last Updated: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (11:33 IST)
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

73 ஆவது சுதந்திர தினமான இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றி வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. இதன் பிறகு உரையாற்றிய முதல்வர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் எனவும், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களாகவும் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் எனவும் கூறினார். இதன் பிறகு, சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு ஓய்வூதியம் 15,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :