வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (18:33 IST)

விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு - பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை

நாமக்கல் டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவின் தற்கொலை தொடர்பாக, அவரது பெற்றோரிடம் இன்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மாநில இயக்குநர் ராமசாமி விசாரணை நடத்தினார்.

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா கடந்த மாதம் நாமக்கலில் உள்ள காவலர் குடியிருப்பில் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற விசாரணையில் விஷ்ணுப்ரியாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அளித்த தகவல்கள் அனைத்தையும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மாநில இயக்குநர் ராமசாமி  பதிவு செய்தார்.
 
அந்த தகவல்கள் அனைத்தும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் 2 நாட்களில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும் ராமசாமி தெரிவித்தார்.
 
மேலும், இந்த தற்கொலை வன்கொடுமையால் நடந்துள்ளதா என்பது குறித்தும் ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை நடத்தும் என அவர் கூறினார். தேவைப்பட்டால் கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற ஆதிதிராவிடர் ஆணையம் பரிந்துரைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் ராமசாமி  கூறினார்.