Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உயிரை கொடுத்து பள்ளி மாணவர்கள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:17 IST)
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் திம்பராயனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி மானவர்களை காப்பாற்றினார்.

 

 
கிருஷ்ணகிரி அருகே வேப்பனஹள்ளியில் தனியார் மழலைகள் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் பேருந்து ஓட்டுநர் வழக்கம்போல் மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றார். செல்லும் வழியில் திடீரென பேருந்து ஓட்டுநர்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த அவர் உடனே பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார்.
 
அதன்பிறகு அவர் உயிர் பிரிந்தது. உயிர் போகும் நேரத்திலும் மாணவர்கள் உயிரை காப்பாற்றிய அவரை அனைவரும் பாராட்டினர்.


இதில் மேலும் படிக்கவும் :