Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கழிவு நீரை தெருக்களில் விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்


Abimukatheesh| Last Updated: திங்கள், 30 ஜனவரி 2017 (19:02 IST)
சென்னை தெருக்களில் கழிவு நீரை விட்டால் ரூ.1 லட்சம் அபராதம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்த சட்ட முன்வடிவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 


சென்னை பெருநகர மாநகராட்சி மேம்பாடு ஒழுங்கு முறையின் கீழ் அனுமதியின்றி கால்வாய் இணைப்பு அமைக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்த சட்ட முன்வடிவு மசோதாவில் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதன்படி, குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீர் விட்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வணிக வளாங்களாக இருந்தால் ரூ.10 ஆயிடம் முதல் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :