வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2017 (11:46 IST)

தினகரனுக்கு எதிராக மாறிய மச்சான் வெங்கடேஷ்!

தினகரனுக்கு எதிராக மாறிய மச்சான் வெங்கடேஷ்!

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு எதிராக தற்போது ஒரே நேரத்தில் கட்சியும், குடும்பமும் திரண்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுகிறது.


 
 
தினகரன் தனது விருப்பம் போல் முடிவெடுத்து செயல்பட்டதால் அதிமுக அமைச்சர்களிடையே அதிருப்தி கிளம்பி தற்போது ஒட்டுமொத்த அமைச்சரவையும் தினகரனுக்கு எதிராக உள்ளது. அதிமுகவில் இருந்தும் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்துவிட்டனர்.
 
இதனால் தனது பலத்தை நிரூபிக்க 30 எம்எல்ஏக்களை தன்னை சந்திக்க வைத்த தினகரன் பக்கம் தற்போது 5 எம்எல்ஏக்கள் தான் இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் மீண்டும் எடப்பாடி பக்கம் வந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இப்படி கட்சிக்குள் தினகரனுக்கு எதிர்ப்பு முற்றுகிற அதே நேரத்தில் குடும்பத்திலும் தினகரனுக்கு எதிராக ஒரு அணி செயல்பட ஆரம்பித்துள்ளது.
 
அந்த அணியில் தினகரனின் மச்சானும், அவரது மனைவி அனுராதாவின் சகோதரனுமான டாக்டர் வெங்கடேஷ் இணைந்துள்ளது தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டாக்டர் வெங்கடேஷ், பாஸ்கரன், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் தினகரனுக்கு எதிராக தற்போது குடும்பத்தில் ஒரு அணியை ஆரம்பித்துள்ளனர்.
 
ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் டாக்டர் வெங்கடேஷும், தினகரனும் தான் போயஸ் கார்டன் பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் டாக்டர் வெங்கடேஷ் திவாகரன் அணியில் சேர்ந்திருப்பது தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.