Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை - லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே விளக்கம்


Murugan| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (14:50 IST)
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை தற்போது சந்தித்து பேசி வருகிறார். 

 

 
அப்போது அவர் ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அவரோடு சேர்ந்து ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
 
அப்போது பேசிய ரிச்சர்ட் பீலே “ ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து ஏராளமான வதந்திகள் பரவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு ஏற்பாடு. 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஜெயலலிதா கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இருதயம் வரை தொற்று பரவியிருந்தது. அதோடு, உயர் ரத்த அழுத்தம், மூச்சு திணறலால் அவர் மிகவும் சிரமப்பட்டார்.
 
எனவே, அவருக்கு உலகின் மிக உயர்ந்த  சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது” என அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :