Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.வின் பிரத்தியோக ஆம்புலன்ஸ் எங்கே போனது? - அப்பல்லோ மருத்துவர் கேள்வி

சனி, 11 மார்ச் 2017 (14:15 IST)

Widgets Magazine

செப்.22ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட போது, அவருக்காகவே செயல்பட்ட ஆம்புலன்ஸ் எங்கே போனது என மருத்துவர் அழகு தமிழ் செல்வி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


 

 
தமிழ் செல்வியின் தாயார் மரணம் அடைந்ததையடுத்து,  ஜெயலலிதாதான் அவரை மருத்துவத்திற்கு படிக்க வைத்தார். இவர் ஜெ. அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையிலும் பயிற்சி மருத்துவராக பணியாற்றியுள்ளார். ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறும் இவர், சசிகலாவை எதிராக களம் இறங்கியிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
 
இவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது ஜெ.வின் மர்ம மரணம் குறித்து பல வேள்விகளை எழுப்பினர். 
 
செப்.22ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது? அவரின் உதவியாளர்கள் எங்கே சென்றனர்?  அவருக்கு அளிக்கப்பட்டிருந்த கருப்பு பூனை படை எங்கே போனது? ஜெ. உடல் நலம் பாதிக்கப்பட்ட அழைத்துச் செல்லப்பட்ட போது, போயஸ்கார்டனில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் எங்கே?. ஜெயலலிதா உடல்நிலை காரணம் கொண்டு, ஒரு ஆம்புலன்ஸ் எப்போதும் போயஸ் கார்டனில் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது?. 
 
நோயாளிகளை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோமோ, அதுதான் அவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களுக்கு உதவும். சாதாரண குடிமகனுக்கு இப்படியெனில், நாட்டின் முதலமச்சராக இருந்த அவரை, ஏன் அப்பல்லோவிலிருந்து ஆம்புலன்ஸை வரவழைத்து, அதன்பின் மருத்துவமனையில் அனுமதித்தனர்?. இதனால் ஏற்பட்ட கால தாமத்தினால்தான் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுயநினைவை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
அப்பல்லோ மருத்துவமனையில் அவர் 75 நாட்கள் இருந்துள்ளார். அங்கு தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த  சிசிடிவி கேமரா பதிவுகள் என்னவானது? ஜெ. மரணம் அடைந்த பின், அவரை அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது ஏன்?. 


 

 
இது எதற்கும் சசிகலா தரப்பிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, சி.பி.ஐ விசாரனை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும். ஜெ.விற்கு சிகிச்சை அளித்த சில மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் (நர்ஸ்)களை நீக்கிவிட்டனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜெயலலிதான் என்னை படிக்க வைத்தார். விரைவில் கட்சியில் ஒரு பொறுப்பை உனக்கு அளிக்கிறேன் என என்னிடம் கூறியிருந்தார். அது இல்லையென்றாலும், அவரால் எனக்கு கிடைத்த எம்.பி.பி.எஸ் பட்டமே எனக்கு போதும். 
 
என்னை ஓ.பி.எஸ் அணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஜெ.வின் மரணம் குறித்த மர்மங்களை வெளியே கொண்டு வரும்வரை ஓயமாட்டோம்” என அவர் பேசினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இலை சாயும், சூரியன் அஸ்தமிக்கும்: வசனங்களை அள்ளி வீசும் நாஞ்சில் சம்பத்!!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நிச்சயம் திமுக தோல்வியைத் தழுவும் என சில வரலாற்று ...

news

பஞ்சாபில் பாஜகவை 3ம் இடத்திற்கு ஓடவிட்ட ஆம் ஆத்மி

பஞ்சாபில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் ...

news

கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்படிருந்த கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிற்கு ...

news

பணத்துக்கும், அதிகாரத்திற்கும் மட்டுமே அரசியலில் இடம்: 16 வருட போராட்டத்தின் பலன் 100க்கும் குறைவான ஓட்டு!!

மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி மணிப்பூர் தேர்தலில் ...

Widgets Magazine Widgets Magazine