வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (19:35 IST)

அப்துல் கலாம் இசை ஆர்வம் மிக்கவர்: ஆசிரியர் கல்யாணி பேட்டி

டாக்டர் அப்துல் கலாம் டி.ஆர்.டி.ஓ. வில் பணியில் இருந்தபோது அங்கு உள்ள டிபன் லேப் என்ற பள்ளியில் இசை ஆசிரியராக கல்யாணி என்பவர் பணியாற்றி வந்தார்.
 

 
அவர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருமாறு டாக்டர் அப்துல் கலாமை அழைக்க சென்றார். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்துல் கலாம் 1989 முதல் 1992 வரை கல்யாணியிடம் வீணை கற்றுக் கொண்டார்.
 
இது குறித்து ஆசிரியர் கல்யாணி கூறியதாவது:–
 
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இசை படிக்க என்னை தேடி வந்தார். நான் நீங்கள் சொல்லி இருந்தால் நானே வந்து இருப்பேன் என்று கூறினேன். அதற்கு அப்துல் கலாம் குருவை தேடி தான் சிஷ்யன் வர வேண்டும் என்று கூறினார். அவரை விட நான் வயதில் சிறியவள். இருந்தாலும் எனக்கு அதிக மரியாதை கொடுத்தார்.
 
பெரியவர்களுக்கு மரியாதை, குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் போன்றவை அவரிடம் இருந்துதான் கற்று கொள்ள வேண்டும். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டை கேட்டால் கடவுளிடம் பேசியது போல் உள்ளது என்று டாக்டர் அப்துல் கலாம் என்னிடம் அடிக்கடி சொல்வார். இசையை அவர் மிகவும் நேசித்தார். நெருக்கடியான நேரத்தில் இசையை எடுத்துக் கொண்டார்.
 
இவ்வாறு டாக்டர் அப்துல் கலாம் பற்றி இசை ஆசிரியர் கல்யாணி கூறினார்.