வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (12:33 IST)

கழுதையும், குதிரையும் எம்எல்ஏ ஆக முடியும்: கிருஷ்ணசாமி சர்ச்சை கருத்து!

கழுதையும், குதிரையும் எம்எல்ஏ ஆக முடியும்: கிருஷ்ணசாமி சர்ச்சை கருத்து!

நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், மாணவி அனிதாவின் மரணத்தில் சர்ச்சைக்குறிய வகையிலும் தொடர்ந்து பேசி வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினர்களை கழுதை மற்றும் குதிரைகளோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.


 
 
டாக்டர் கிருஷ்ணசாமி சமீப நாட்களாக கூறி வரும் கருத்துக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனால் கிருஷ்ணசாமிக்கும் பாலபாரதிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று டாக்டர் கிருஷ்ணாசாமியிடம் பேட்டி ஒன்று எடுத்தது. அதில் பாலபாரதி, கிருஷ்ணாசாமி இடையே உள்ள பிரச்சனை குறித்து பேசப்பட்டது. அப்போது பாலபாரதி கிருஷ்ணசாமி மீது வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியும், கிருஷ்ணசாமி பாலபாரதி மீது வைத்த விமர்சனங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 
விவாதத்தின் போது பாலபாரதி யார்? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிகழ்ச்சியின் நெறியாளர் பாலபாரதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என கூறினார்.
 
அதற்கு உடனடியாக கிருஷ்ணசாமி இந்தியாவில் கழுதையும், குதிரையும் சட்டமன்ற உறுப்பினராக முடியும் என கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நெறியாளர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினர்களை இப்படித்தான் பார்க்கிறார், அதே சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் கிருஷ்ணசாமியும் இருந்திருக்கிறார் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.