1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (14:52 IST)

மாட்டுக்கறி உண்பதை யாரும் தடுக்க முடியாது: கமல் அதிரடி

சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடந்த தூங்காவனம் படத்தின் பாடல் வெளியீட்டுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல் மட்டுக்கறி உண்பதிற்கு தடையிடுவதற்கு எதிரான தனது கருத்தை பதிவு செய்தார்.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படத்தின் பாடல்கள் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "‘தூங்காவனம்' படம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை நாங்கள் 52 நாட்களில் எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துதான் தொடங்கினோம். கடைசி நேரத்தில் படத்திற்கு முக்கியமாக சில காட்சிகள் தேவைப்பட்டதால், மேலும் 8 நாட்கள் எடுத்துக்கொண்டோம். மொத்தம் இந்த படம் 60 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நான் நடித்த ‘ராஜபார்வை' படத்தை 52 நாட்களுக்குள் எடுத்து முடித்தோம். என்றாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரத்தில் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இதற்கு படத்தில் பணிபுரிந்த அனைவரின் ஒத்துழைப்புதான் காரணம். அவர்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமாகாது என்றார்.

நிகழ்ச்சிக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் கமலிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதால் ஏற்பட்ட பிரச்சினையில் உத்திர பிரதேசத்தில் ஒருவர் கொலையானது பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல் "நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது. மேலும் தான் முன்பு மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும் தற்போது சாப்பிடுவதில்லை எனவும் கூறினார்.