Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவே குற்றவாளி; பிறகு எதற்கு ஆட்சி? - பொங்கும் திருமாவளவன்

Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (01:01 IST)

Widgets Magazine

ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று தீர்ப்பு அமைந்திருப்பதால் தற்போதுள்ள ஆட்சி தொடருவதில் எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


 

சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஜுன் மாதம் முடிவடைந்தது. இந்திய அளவில் ஊழல்வாதிகள் அச்சப்படும் அளவில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனை விசிக வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதே வேளையில் மறைந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவும் இதில் குற்றவாளிதான் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது.

கடந்த அதிமுக சட்டசபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய வாக்குகள் ஜெயலலிதாவிற்காக வழங்கப்பட்ட வாக்குகள். மக்கள் ஜெயலலிதாவிற்கு வழங்கிய வாக்குகளின் அடிப்படையில்தான் இங்கு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று தீர்ப்பு அமைந்திருப்பதால் தற்போதுள்ள ஆட்சி தொடருவதில் எந்த வகையிலும் நியாயம் இல்லை.

விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஜெயலலிதாவும் குற்றவாளி என்று தீர்ப்பு அமைந்துவிட்டதால், அடுத்து பொதுத் தேர்தலை நோக்கி போவதுதான் நியாயமாக இருக்க முடியும். மீண்டும் தேர்தல் நடத்தி மக்கள் வாக்களிப்பதன் மூலம் புதிய அரசு அமைந்தால் தமிழகத்திற்கு நன்மைகள் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

"எந்த கூண்டில் அடைத்தாலும் அங்கிருந்தபடியே வழிநடத்துவேன்" - சசிகலா சவால்

எந்த கூண்டில் என்னை அடைத்தாலும் அதிமுகவை அங்கிருந்தபடியே சிறப்பாக வழிநடத்துவேன் என்று ...

news

சட்டப்படி ஸ்டாலினை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்: வீரமணி புது குண்டு

நிலையான ஆட்சி அமையாது என்ற தெளிவு ஆளுநருக்கு வருமேயானால், எதிர்க்கட்சி சட்டப்பேரவை ...

news

”நீதிமன்றங்களுக்கும் கடமை இருக்கிறது” - தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் கமெண்ட்

நீதிமன்றங்களுக்கும் கடமை இருக்கிறது. மக்களுக்கும் கூட அந்த கடமை உள்ளது என்று ...

news

“இன்று முதல் அரசியல் பிரவேசம் தொடங்குகிறது”: ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து தீபா அதிரடி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை ...

Widgets Magazine Widgets Magazine