1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (19:45 IST)

இதே சிகிச்சை தொடர்ந்தால் உங்களுக்கு பக்கவாதம் வரும் ; ஜெ.வை எச்சரித்த மருத்துவர்

போயஸ் கார்டனில் ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஏற்கனவே மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை செய்தது தெரிய வந்துள்ளது.


 

 
ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டில் கீழே தள்ளிவிடப்பட்டு அனுமதிக்கப்பட்டதாக, அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
மேலும், “முக்கியமாக 2014ம் ஆண்டு மே மாதம் ஜெ.விற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சாந்தா ராம் (துணை வேந்தர்- எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம்), போயஸ்கார்டனில் நீங்கள் எடுத்து வரும் சிகிச்சையால் உங்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பிருக்கிறது என ஜெ.விடம் கூறினார். அடுத்த நாள் முதல் போயஸ்கார்டன் உள்ளே வர அவர் அனுமதிக்கப்படவில்லை.. ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
 
ஜெ.வை எச்சரித்த அந்த மருத்துவரை மீண்டும் போயஸ் கார்டன் பக்கம் வராமல் தடுத்தது யார்? என அவர் கேள்வி எழுப்பினார்.