வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (10:20 IST)

குழந்தையில்லாமல் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டர்: டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவு!

குழந்தையில்லாமல் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டர்: டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த கமர்நிஷா என்ற பெண்ணுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை. அதனால் அவரும் அவரது கணவரும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்றனர்.


 
 
கமர்நிஷாவுக்கும் சிகிச்சைக்கு சென்ற டாக்டருக்கும் இடையே நட்பு உருவாகியுள்ளது. பின்னர் டாக்டருடன் உறவு கொண்டு கமர்நிஷாவுக்கு குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் கமர்நிஷாவின் கணவருக்கு தெரியவர அவர் பிரிந்து சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் தன்னை திருமணம் செய்யுமாறு டாக்டரை வலியுறுத்தியுள்ளார் கமர்நிஷா ஆனால் தொடக்கத்தில் சம்மதிக்காமல் இருந்த அந்த டாக்டர் சில மாதங்கள் கழித்து காரில் வைத்து கமர்நிஷாவுக்கு தாலி கட்டியுள்ளார். அதன் பின்னர் கமர்நிஷாவை சந்திப்பதையே நிறுத்தியுள்ளார் அந்த மருத்துவர்.
 
இதனால் கமர்நிஷா தற்போது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தன்னுடைய குழந்தைக்கும், அந்த டாக்டருக்கும் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் மற்றும் குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை செய்து அந்த அறிக்கையை வரும் நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.