Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மருத்துவர் பாலாஜியின் பொய் அம்பலம்: விஜயபாஸ்கரிடம் வாங்கிய 5 லட்சம் எதற்கு; தொடரும் மர்மம்! (ஆடியோ இணைப்பு)

மருத்துவர் பாலாஜியின் பொய் அம்பலம்: விஜயபாஸ்கரிடம் வாங்கிய 5 லட்சம் எதற்கு; தொடரும் மர்மம்! (ஆடியோ இணைப்பு)

புதன், 12 ஏப்ரல் 2017 (10:34 IST)

Widgets Magazine

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்களில் சில ஊடகங்களில் கசிந்தன.


 
 
அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர் பாலாஜிக்கு நவம்பர் 1-ஆம் தேதி 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாக இருந்தது. இதனையடுத்து அவர் ஜெயலலிதாவின் கைரேகை சான்று அளித்ததற்கு லஞ்சமாக அந்த 5 லட்சம் ரூபாயை வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
 
ஆனால் இதற்கு மருத்துவர் பாலாஜி மறுப்பு தெரிவித்ததாகவும், லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக வந்த போது அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கினார். அந்த பில்லை கட்ட அப்பல்லோ நிர்வாகம் கட்ட மறுப்பு தெரிவித்ததால் அதனை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்கு கொண்டு சென்று அந்த பில்லை கட்டியதாகவும், அதற்காக பெறப்பட்ட பணம் தான் அது என செய்திகள் வெளியானது.
 
விஜயபாஸ்கரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் தன்னுடைய பெயர் இருந்ததால் மருத்துவர் பாலாஜி இந்த விளக்கத்தை அளித்தார். இதன் மூலம் விஜயபாஸ்கரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உண்மையான ஆவணங்கள் தான் என விவகாரம் வேறு வடிவில் விஸ்வரூபம் ஆனது.
 
இதனை சுதாரித்துக்கொண்ட மருத்துவர் பாலாஜிக்கு, என்ன அழுத்தம் வந்ததோ தெரியவில்லை உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஜெயலலிதாவின் கை ரேகையை பதிவு செய்வதற்காக நான் யாரிடம் பணம் பெறவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ.5 லட்சம் வாங்கியதாக நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கவில்லை. எனவே செய்திகளில் வெளியான அந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது என அனைத்தையும் மறுத்தார்.

 

நன்றி: தி இந்து
 
ஆனால் தற்போது அவரது பொய் அம்பலமாகியுள்ளது. மருத்துவர் பாலாஜி விஜயஸ்பாஸ்கரிடம் இருந்து பெறப்பட்ட பணத்துக்கு விளக்கம் அளித்து தி இந்து நாளிதழுக்கு அளித்த தொலைப்பேசி உரையாடல் பேட்டி தற்போது வெளியாகி உள்ளது. பேட்டி அளித்துவிட்டு, ஏன் தற்போது பேட்டியே அளிக்கவில்லை என அறிக்கை மூலம் மருத்துவர் பாலாஜி அந்தர் பல்டி அடித்திருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த அந்தர்பல்டிக்கு ஏதாவது அழுத்தமோ, நிர்பந்தமோ காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகர் ரஞ்சித்திடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஆவடி குமார்! (வீடியோ இணைப்பு)

அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த ஆவடி குமாரின் கேள்விக்கு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ...

news

ஆட்சி கலைந்தால் கலையட்டும்: அதிமுக எம்எல்ஏ அசால்ட் பதில்!

அதிமுகவின் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக போர்க்கொடி ...

news

அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கமா?

ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்ய காரணமாக இருந்தவைகளில் ஒன்று அமைச்சர் ...

news

விவசாயிகள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ...

Widgets Magazine Widgets Magazine