Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிக்கப்போகும் நடிகர் தனுஷ்?: அடுத்தது இந்த பரிசோதனை தான்!

சிக்கப்போகும் நடிகர் தனுஷ்?: அடுத்தது இந்த பரிசோதனை தான்!


Caston| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:29 IST)
நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நீண்ட நாட்களாக கூறி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

 
 
நடிகர் தனுஷ் தான் யாருடைய மகன் என்பதை நிரூபிக்க அவகாசம் கேட்ட பொழுதே, இதில் தனுஷ் யாருடைய மகன் என்ற சந்தேகம் வந்தது. இதனையடுத்து இதனை தல்ளுபடி செய்யவும் தனுஷ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால் வழக்கு தொடர்ந்து நடந்துவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக மருத்துவ அறிக்கை ஒன்றில் நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தனுஷ் தனது உடலில் உள்ள சில மச்ச அடையாளங்களை லேசர் மூலம் அழித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும் 27-ஆம் தேதி வருகிறது. அப்போது கதிரேசன், மீனாட்சி தம்பதியினருக்கும் நடிகர் தனுஷுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் என கூறப்படுகிறது.
 
இதில் தனுஷ் தங்கள் மகன் தான் என நிரூபனமாகும் மேலூர் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நான் மரபனு பரிசோதனைக்கு கூட தயார் என கதிரேசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :