வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By murugan
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (16:50 IST)

கலாய்த்த அமைச்சர்- காண்டான திமுக!

நேற்று நடை பெற்ற சட்டசபை கூட்டத் தொடரில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் தோப்பு என்.டி,வெங்கடாசலம் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

தாமிரவருணி, பவானி, காவிரி ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து, தேமுதிக மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்க்ள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு அறிவிப்பை கொண்டு வந்தனர்.

இது குறித்து பதில் அளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதிமுக ஆட்சியில் 959 தொழிற்சாலைகள் மீது நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், முந்தைய ஆட்சிக் காலத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது, காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாகச் செயல்பட்டது என்றும் கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக உறுப்புனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேரவைத் தலைவர் தனபாலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர் தேவையில்லாத சில வார்த்தைகளை தெரிவித்துள்ளார். அதை நிருபிக்காத பட்சத்தில், அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். பேரவைத் தலைவர் அதை எற்க மறுத்ததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.