1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (04:51 IST)

ஆகஸ்ட் 2ஆம் தேதி - திமுக தேர்தல் அறிக்கைக் குழு கூட்டம்: டி.ஆர்.பாலு தகவல்

திமுக தேர்தல் அறிக்கைக் குழு கூட்டம் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் என இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, முன்னாள் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
வரும் 2016 ஆம் சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும்  தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
 
இந்தக் கூட்டத்தில், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் உள்பட 9 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.