Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தெர்மாக்கோல் என கத்திய திமுக உறுப்பினர்கள் - சட்டசபையில் சிரிப்பலை


Murugan| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (12:06 IST)
இன்று கூடிய தமிழக சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, திமுக உறுப்பினர்கள் தெர்மாக்கோல் என கத்தியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

 
அமைச்சர் செல்லூர் ராஜூ வெயில் காரணமாக வைகை அணையின் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் போட்டு மூடும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே பல்பு வாங்கி கைவிடப்பட்டது. அனைத்து தெர்மாக்கோல்களும் ஓரமாக ஒதுங்கியது கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானது. இதனையடுத்து செல்லூர் ராஜூவை ‘தெர்மாக்கோல்’ என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்களை போட்டனர்.
 
இந்நிலையில், இன்று தமிழக சட்டசபை கூடியது. அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து பேச தொடங்கினார். அப்போது, திமுக உறுப்பினர்கள் தெர்மாக்கோல்.. தெர்மாக்கோல்.. என கத்தினர். இதையடுத்து சட்டசபையில் சிரிப்பொலி ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :