Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியை திமுக எம்.எல்.ஏ திடீரென சந்தித்தது ஏன்? திடுக்கிடும் தகவல்


sivalingam| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (22:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த முறை அரசியலில் குதிப்பது உறுதி என்றும், 'காலா' படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சியின் சின்னம் மற்றும் கொடி, பெயரை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.


 
 
இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒருசில லட்டர்பேட் கட்சிகள் கூறிக்கொண்டிருந்தாலும் சில பெரிய கட்சிகளே ரஜினி அரசியலுக்கு வருவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி அவரிடம் சமாதான தூது விட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் திருவெறும்பூர் எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி துணைத்தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீரென ரஜினியை சந்தித்தார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதியாக இருப்பதாகவும் இந்த நேரத்தில் ரஜினி அரசியலில் நுழைந்து குழப்பம் எதுவும் செய்துவிட வேண்டாம் என்று தூதுவிட்டதாகவும் அரசியல் வதந்தி ஒன்று வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :