செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 18 ஜனவரி 2017 (21:02 IST)

ஜல்லிக்கட்டு தடைக்கு பாஜக, காங்கிரஸ், திமுக கட்சிகளே காரணம் - தம்பிதுரை

அ.தி.மு.க கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையடுத்து கரூர் நகர அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் சுபாஸ் சந்திரபோஸ் சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். 


 

 
மேலும் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அ.தி.மு.க கழக கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரை பேசியதாவது:
 
என்னதான் குழப்பம் நீடிக்க நினைத்தாலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும்., புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் உருவாக்கிய இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் எண்ணற்ற திட்டங்களை  புரட்சித்தலைவி ஜெயலலிதா நிறைவேற்றினார். காளையை பட்டியலில் யார் சேர்த்தது?. 2004ம் வருடம் தி.மு.க ஆட்சி காலத்தில் காட்சி படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தது அக்கட்சி, தற்போது போராடுகின்றதே, மேலும் அந்த பட்டியலில் சேர்த்த விவகாரம் குறித்து மோடி அரசு பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இது தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஜல்லிக்கட்டு என்று பலமுறை கடிதம் எழுதினார். 
 
தற்போது ஜல்லிக்கட்டிற்கு குழப்பம் நீடிப்பதற்கு காரணம் காங்கிரஸ், தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே. தமிழகத்தில் நிலவும் குழப்பத்தை தீர்த்து வைக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள்” என அவர் பேசினார்.

- சி. ஆனந்தகுமார்