வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (01:43 IST)

குளுகுளு மலைஉச்சியில் உற்சாக டான்ஸ் ஆடிய மு.க.ஸ்டாலின்

நமக்கு நாமே விடியல் மீட்பு இரண்டாம் கட்ட பயணத்தின் போது, தெப்பக்காடு பகுதியில் பனியர், இருளர் மற்றும் குரும்பர் ஆகிய பழங்குடியின மக்களுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடனமாடி மகிழ்ந்தார்.
 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு இரண்டாம் கட்ட பயணத்தை நீலகிரி மாவட்டத்தில் தொடங்கினார். அப்போது, கூடலூர் தொகுதியில் உள்ள தெப்பக்காடு பகுதியில் பனியர், இருளர் மற்றும் குரும்பர் ஆகிய பழங்குடியின மக்களை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய முறையில் நெல்லிக்காய் மாலை அணிவித்து  அந்த பகுதி மக்கள் வரவேற்றனர்.
 
மேலும், அவர்களுடைய கிராமங்களிலிருந்து கூடலூர் செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் கூட இல்லை என்றும், அவர்களின் கிராமங்கங்களில் உள்ள குறைபாடுகளையும், துன்ப நிலையையும் அவருடன் பகிர்ந்துக் கொண்டனர்.
 
தோடர்கள், கோத்தர்கள் மற்றும் படுகர் மக்களுடனான சந்திப்பின் போது, அவர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். மேலும், அவர்களுடன் இணைந்து நடனம் ஆட அழைத்தனர்.
 
முதலில் சற்று தயங்கிய ஸ்டாலின் பின்பு தைரியமாக களத்தில் குதித்தார். இதனையடுத்து, அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து, அவர்களுடன் உற்சாகமாக நடனமாடினார். இதைக்கண்ட அருகில் இருந்த திமுகவினர் வெட்கத்தில் நெளித்தனர்.