வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (00:23 IST)

மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே 2 ஆம் கட்ட சுற்றுப் பயணத்தை நீலகிரியில் தொடங்கினார்

நமக்கு நாமே 2ஆம் கட்ட சுற்றுப் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கினார்.
 

 
நீலகிரி மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட "நமக்கு நாமே" பயணத்தை தொடங்கினார். வெலிங்க்டன் கண்டோன்மென்ட்டில் இருந்து நடைபயணத்தை துவக்கினார்.
 
மேலும், அங்கு,1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போரை வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய பீல்டு மார்ஷல் சாம் மானெக்சாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்பு, கார்கில், இந்தோ- பாகிஸ்தான் போர் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு அங்குள்ள இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
 
இது குறித்து, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், இந்தியன் என்ற மன நிறைவுடனும், பெருமையுடனும் அங்கு நின்ற போதிலும், போரிட்டு மரணம் அடைந்தவர்களின் கல்லறையைப் பார்த்து கலங்கினேன். நம்மை பாதுகாக்க எவ்வளவு பெரிய உயிர் தியாகங்களை இந்த வீரர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த தியாகம் வீண் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்தேன். அனைவரும் ஒருங்கிணைந்து அமைதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டி, போற்றிப் பாதுகாப்பது நம் முன் உள்ள முக்கிய கடமை என தெரிவித்துள்ளார்.