வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (22:17 IST)

அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின்: இது என்ன புதுக்கதை?

அம்மா உணவகத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாப்பிடுவது போன்ற புகைப்படம் சமுக வலைதளங்களை கலக்கி வருகிறது.
 

 
இன்று சமூக வலைத்தளங்களில் இன்று மிகவும் பரபரப்பாக ஒரு படம் வலம் வந்து கொண்டுள்ளது. அதில், அம்மா உணவகம் முன்பு நிற்கும் மு.க. ஸ்டாலின் ஒரு தட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்த படம் சமூக வலைத்தளங்களில் இன்று மிகவும் பரபரப்பாக பரப்பட்டது. இதை அறிந்த மு.க.ஸ்டாலினே அடப்பாவிங்களா என அதிர்ச்சி அடைந்தாராம்.
 
மேலும், சமுகவலைதளங்களில் இந்த படத்தை முதன்முதலில்  பார்ப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சி. பின்பு சுதாரித்துக் கொண்டு பார்த்த போதுதான் இது கிராபிக்ஸ் வேலை தெரிந்ததாம்.
 
இதைஇப்படியே விடமுடியாது. நாமும் கச்சேரியை ஆரம்பித்துவிடவேண்டியதுதான் என திமுக குரூப் ஒன்று களம் இறங்கிவிட்டதாம். என்ன என்ன கூத்து எல்லாம் அரங்கேறப்போகின்றதோ. கடவுளுக்கே வெளிச்சம்.