நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியான திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம்!

நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியான திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம்!


Caston| Last Modified வியாழன், 13 ஏப்ரல் 2017 (10:23 IST)
தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக கட்சி விவகாரங்களில் அதிகமாக ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வருகிறார். ஊடகங்களில் அவரை பார்த்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் நேற்று அவரது புகைப்படம் வெளியானது.

 
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதுமை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால் சில மாதங்களுக்கு முன்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
 
தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக தலைவர் கருணாநிதி எப்படி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி எம்பி திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகியுள்ளதால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :